இந்திய அணி 145 ஓட்டங்களினால் முன்னிலை!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்படி போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதற்கமைய இந்திய அணி 145 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.