இந்தியாவில் 3 சிசுக்களுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் முதன் முதலாகப் பரவியதாகக் கூறப்படும் HMPV என அழைக்கப்படும் வைரஸ் தொற்று மூன்று சிசுக்களுக்கு இந்தியாவில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 3 மற்றும் 8 மாத குழந்தைகள், அஹமதாபாத்தில் 2 மாத குழந்தை ஆகியோருக்கு குறிப்பிட்ட தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாகச் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்காணிக்கும் மருத்துவ அமைப்பினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த மூன்று சிசுக்களுக்கும் HMPV தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதேவேளை, சீனாவில் சுவாச நோய்கள் RSV மற்றும் HMPV போன்ற வைரசினால் ஏற்படுகிறது.

இந்தநிலையில், தற்போது இந்தியாவில் பெறப்பட்ட கண்காணிப்புத் தரவுகள் சுவாச நோய்த் தொற்றுக்களில் அசாதாரண எழுச்சியைக் குறிக்கவில்லை என இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்