இந்தியாவில் பேருந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு 24 பேர் காயம்!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 24ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அல்மோராவில் இருந்து ஹல்த்வானி நோக்கிச் சென்ற பேருந்து, பீம்டல் நகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், கயிறுகளின் உதவியால் பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 15 காவுவண்டிகள் அனுப்பப்பட்டு, காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்