
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்கள்
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்களை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்களும், செப்டம்பர் இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்களும், 2023 மார்ச் இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்கள் என மூன்று கட்டங்களாக இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பீடாக 2.5 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கை பொலிஸாருக்கு 2,000 முச்சக்கர வண்டிகள், ஜீப்கள் உட்பட 72 ஜப்பானிய உதவி வாகனங்கள் மற்றும் 150 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்நக்கது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் மற்றும் மஹிந்திராவின் துணைத் தலைவருமான திரு ஜோய்தீப் மொய்த்ரா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.