இத்தாலிய பத்திரிகையாளர் சாலா விடுவிப்பு

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின்(Giorgia Meloni) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ஈரானில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பத்திரிகையாளர் சிசிலியா சாலா(Cecilia Sala) விடுவிக்கப்பட்டு இத்தாலி திரும்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை விசாவில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பணியாற்றி வந்த 29 வயது சாலா, டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைச்சாலை என அறியப்பட்ட எவின் சிறையின்(Evin prison) தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் கைதாணையின் பேரில் மிலான் நகரில் ஈரானிய தொழிலதிபர் முகமது அபேதினி(Mohammad Abedini) கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு சாலா கைது செய்யப்பட்டார்

சாலாவின் விடுதலையானது “தீவிரமான தூதரக மற்றும் உளவுத்துறை முயற்சிகளின்” விளைவாகும் என இத்தாலிய அரசாங்க அறிக்கை கூறியுள்ளது.

சிசிலியா சாலாவின் வருகையை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மெலோனி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்