இதயத்தில் குத்திய கத்தி : 6 நாட்களாக கத்தியோடு போராடி தவித்த நபர்!
இதயத்தில் கத்தியோடு 6 நாட்களாக தவித்த நபர் -ரை வைத்தியர்கள் போராடிக் காப்பாற்றிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா – ஹரியானா மாநிலத்தில் கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட தகராற்றின் போது தினேஷ் என்பவரின் இதயத்தில் குத்திய கத்தியை வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்தியின் பிடி உடைந்ததால் கத்தி முழுமையாக இதயத்துக்குள் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று 6 நாட்களுக்கு பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 4 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் கத்தியை அகற்றியதுடன், அதிக இரத்தபோக்கு ஏற்படாமல் வைத்தியர்கள் தடுத்துள்ளனர்.
இந்நிலையில் தினேஷ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.