
இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி இன்று முதல்
போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் (GOVPAY) கோவ்பே செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் விடுவிக்கப்படும்.
இந்த திட்டம் இன்று பரீட்சார்த்தமாக 12 இடங்களில் அமுலாக்கப்படவுள்ளன.
குருணாகல், தோரட்டியாவ, மல்சிரிபுர, கோக்கரல்ல, கலேவல, தம்புள்ளை, மடத்துகம, மரதன்கடவல, கெக்கிராவ, திரிபனே, காவரகுளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் இன்று முதல் இணையவழியில் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் திட்டம் அமுலுக்கு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்