இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது