
இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் செயல்படும் அரசியல் மாதிரியை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய இலங்கையானது வலுவான நிறுவனங்களுடன் ஆரம்பிக்கவேண்டும் அன்றி தலைமைகளின் மாற்றத்தினால் மாத்திரமல்ல.
இடைக்கால அரசாங்கம் என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.