ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும் – சிவனேசதுரை சந்திரகாந்தன்
முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பின் பாரிய அழிவுகளை குறைத்திருக்க முடியும், என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக, அவர் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
திட்டமிடலும், முன் தயாரிப்புகளும் இருக்கும் பட்சத்தில் இவ்வித இயற்கை அனர்த்தங்கள் ஊடாக வரும் அழிவுகளை பெருமளவில் தவிர்த்துக்கொள்ள முடியும், என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளப்பெருக்கு ஒன்றுக்கான சாத்தியம் இருக்கின்றதென்பது சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்ட போதும், போதிய அளவிலான உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, இவ்வாறான நிலையில் ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும், எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நஷ்ட ஈட்டுத்தொகைகளை வழங்க அரசாங்கம் உடனடியாக முன்வரவேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்