ஆறு மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை
கடுமையான இடி மின்னலுக்கான எச்சரிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்