ஆர்ப்பாட்டங்கள் – பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இது பொருத்தமற்ற செயற்பாடாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.