ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம்

ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமார் 15,996 பாரம்பரிய வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்காமை காரணமாக குறித்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத வைத்தியசபையில் பதிவு செய்யப்பட்ட சகல வைத்தியர்களும் 5 வருடத்துக்கு ஒரு தடவை தமது பதிவை மீள்புதுபிக்கப்பட வேண்டும்.

எனினும் அவ்வாறு தமது பதிவை புதுப்பிப்பதற்கு ஆயுர்வேத  வைத்திய சபையில் முறையான செயல்முறைகள் அடையாளம் கண்டு செயற்படுத்தப்படவில்லை என்றும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஆயுர்வேத வைத்திய சபையின் 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களுக்கான வருடாந்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.