Sri Lanka Tamil News Site

ஆண் குழந்தை வேண்டும் என அம்மாக்கள் சண்டை: ஒரே நேரத்தில் பிறந்ததால் சர்ச்சை

- Advertisement -

இரண்டு கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், எந்த குழந்தை யாருக்கு பிறந்தது என ஊழியர்கள் குறிப்பெடுக்கத் தவறியதால்  மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை என்னுடையது என இரண்டு பேரும் அடம்பிடித்ததால் நிலைமை இன்னும் மோசமானது.

தெலுங்கானா மாநிலம் மாஞ்சிரியாலா அரசு மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு பேருக்கும் எட்டு நிமிட இடைவெளியில் குழந்தை பிறந்ததுள்ளது.

- Advertisement -

ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் முதல் உதவி சிகிச்சைக்காக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச் சென்றனர். அப்போது யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை ஊழியர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர்.

முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பெற்ற பெண்களிடமே யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்டு ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த ஊழியர்கள் இரண்டு பெண்களிடமும் கேட்டனர்.

இரண்டு பேரும் எனக்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது; என வாதிட்டனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிகாரிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் வந்து விசாரித்தபோது இரண்டு பெண்களும் எங்களுக்கு பெண் குழந்தை பிறக்கவே இல்லை என்று சத்தியம் அடித்து கூறிவிட்டனர். இதனால் குழப்பத்தின் உச்சிக்கு சென்ற மருத்துவமனை நிர்வாகம் ஆண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை என்னுடையதுதான் என்று கூறும் இரண்டு பெண்கள் ஆகியோரிடம் மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை குழந்தைகளை ஒப்படைக்க முடியாது என்பதால் இரு குழந்தைகளும் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் புட்டிப்பால் குடித்துக்கொண்டு மருத்துவமனையிலேயே உள்ளனர்.

- Advertisement -