ஆண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

இந்தியாவில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோத் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆண் கடந்த 2020ஆம் ஆண்டில் கொலை வழக்கில் கைது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் எதிரிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் திருப்பூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் மனைவி மற்றும் குழந்தைகளை தன்னோடு திருப்பூருக்கு அழைத்துச் செல்ல திண்டுக்கல் வந்துள்ள நிலையில் வீட்டில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே குறித்த ஆணை வெட்டி படுகொலை செய்தனர்.

இச் சம்பவத்தை அறிந்த பொலிஸார் குறித்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.