ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க

⬛இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட், மன அழுத்தம், மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மருந்துகள், மரபணுக்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தவகையில் ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

🔶நெல்லிக்காய் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதைக் காணலாம்.

🔶தேங்காய் பாலில் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரம் ஒருமுறை தேங்காய் பாலை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

🔶வினிகரில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பொடுகை ஒழிக்கும், பொட்டாசியம் மற்றும் இதர நொதிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 1/4 பக்கெட் நீரில் 1/2 கப் வினிகரை ஊற்றி அந்த நீரில் தலையை 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, தலைமுடியும் உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

🔶புரோட்டீன் அதிகம் நிறைந்த இறைச்சிகள், மீன், சோயா அல்லது இதர புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். இதனால் புரோட்டீனால்  முடியின் ஆரோக்கியம் அதிகரித்து, முடி உதிர்வது குறையும்.

🔶வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களும் நீங்கும்.

🔶ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வறுத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.

🔶ஒரு கப் சுடுநீரில் க்ரீன் டீ பையை ஊற வைத்து, குளிர்ந்ததும் அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வது குறையும்.உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தால், இஞ்சி, வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்