ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சின்னம்மை
மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரதான ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 133 பணியாளர்கள் நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள 64 ஊழியர்களுக்கு முதலில் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு மீண்டும் பணிக்கு அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு மேலும் 69 ஊழியர்களுக்கு சின்னம்மை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.