ஆசிரிய பயிலுனர்கள் குழு மோதல் : 14 பேர் காயம்
- Advertisement -
அக்மீமன, ருகுணு தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டாம் ஆண்டு பயிலுனர்களின் விடுதிக்குள் நுழைந்த இறுதியாண்டு ஆசிரியர் பயிலுனர்கள் குழுவொன்று தாக்கியதை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
சுமார் 40 இறுதியாண்டு பயிலுனர்கள் அடங்கிய குழுவொன்று, விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் , இரண்டாம் ஆண்டு பயிற்சியாளர்களின் விடுதிக்குள் புகுந்து, அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் இரண்டாம் ஆண்டு பயிற்சி பெற்றவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -