ஆசிரியை ஒருவரை கட்டி வைத்து விட்டு நகைகள் திருட்டு!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களை கழற்றி விட்டு, வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து, அதனூடாக வீட்டினுள் புகுந்த திருடர்கள், குறித்த ஆசிரியையின் கைகளை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டிலிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியை, வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேiலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்