ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை www.doenets.lk இணையத்தளத்தில் “எங்கள் சேவைகள்” என்பதன் கீழ் “Online Applications – Recruitment Exams” மூலம் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் ஒன்லைன் முறையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு டிசம்பர் 1 ஆம் திகதி கடைசி நாளாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.