ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் இலங்கையில் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

“யுனெஸ்கோ” நிறுவனத்தின் சிபாரிசுக்கமைய 1994ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், இலங்கையில் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.