ஆகாயத்தைத் தொடுமளவிற்கு வளர்ந்து வரும் சிவலிங்கம்

இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 55 அடி உயரம் கொண்டது. அதன் மேற்பகுதி மூடப்படாத நிலையில் கோயிலின் அமைப்பும் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை இல்லாத காரணத்தால் சிவலிங்கம் எப்பொழுதுமே சூரிய வெளிச்சத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த கடவுள் “Endla Mallikarjuna Swamy” என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மல்லிகார்ஜூனா சுவாமி சூரியனில் இருப்பதாக அர்த்தப்படுகிறது.

1824 ஆம் ஆண்டில் எண்டாலா மல்லிகார்ஜுனா சுவாமி கோயிலை தெக்காலி சம்ஸ்தான தேஷா ஹரி சந்தன புருந்தவன ஜகதீஷ் சீரமைத்து மீண்டும் கட்டினார் என கோயிலின் மூத்த பூசாரியான பார்லா யுகாந்தர் தெரிவித்தார்.

சம்ஸ்தானதேஷா கோயிலை மேற்கூரையுடன் கட்டியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் அடுத்த நாளே அந்த மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு மூன்று முறை நடந்துள்ளதாக தெரிவித்தார். ஒரு நாள் சிவபெருமான் கனவில் தோன்றி நான் தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் மேற்கூரை கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக சம்ஸ்தானதேஷா மேற்கூரை இல்லாமல் கோயிலை அமைத்துள்ளார் என்று பார்லா யுகாந்தர் தெரிவித்தார். மேலும் இந்த சிவலிங்கம் 55 அடி உயரம் கொண்டதாகவும், அவர்களுக்கென்று ஒரு மண்டபம் இருப்பதாகவும் கூறுகிறார்.

அனைத்து பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை மண்டபத்தில் இருந்து செய்வோம் என்றும், தேவைப்பட்டால் ஒரு ஏணி வைத்து சிவலிங்கத்தின் உச்சியை அடைவோம் என்றும், கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை மாதம் மற்றும் மகா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்