அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்-

அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் 2023 இற்கான ஆசிரியர் தின நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாடசாலை அபிவிருத்திச்சங்க நிறைவேற்று குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.றியாழ், பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.றாஸிக் சிறுவர் மெய்வல்லுனர் வளவாளர் ஜமீல் பாடசாலை பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனப் உறுப்பினர்களான ரீ.எம்.இர்பான் ஐ.ஹஸீனா பானு ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான் அமீர் ஏ பாறூக் பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதி கௌரவ அதிதிகள் விஷேட அதிதிகள் அனைவரும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு களையும் பாராட்டுக்களையும் வழங்கினர். அதிபர் எம் .எச்.எஸ்.ஆர் மஜீதிய்யாவுக்கு இரும்புப்பெண் (IRON LADY) பட்டம் வழங்கி பாடசாலை பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழுவினால் கௌரவிக்கப்பட்டடார்.

அத்துடன் மாணவர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் 2023 இதற்கான ஆசிரியர் தின நிகழ்வு

அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் 2023 இதற்கான ஆசிரியர் தின நிகழ்வு

அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் 2023 இதற்கான ஆசிரியர் தின நிகழ்வு

அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் 2023 இதற்கான ஆசிரியர் தின நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்