அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்தப் போட்டியில் 49.4 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.

அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ஓட்டங்களையும், ரிஷப் பந்த் 37 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி சார்பில்,

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 0
கே.எல்.ராகுல் – 26
தேவ்தத் படிக்கல் – 0
விராட் கோலி – 5
ரிஷப் பந்த் – 37
துருவ் ஜுரெல் – 11
வாஷிங்டன் சுந்தர் – 4
நிதீஷ் ரெட்டி – 41
ஹர்ஷித் ராணா – 7
ஜஸ்ப்ரீத் பும்ரா – 8 மற்றும் முகமது சிராஜ் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும் , கம்மின்ஸ் 2, ஸ்டார்க் 2 மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்