அவசரகால நிலை உடன் அமுலாகும் வகையில் பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை (1-4-2022)  முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமை மற்றும் பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.