Sri Lanka Tamil News Site

அல்-ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

- Advertisement -

பலஸ்தீனிய அமெரிக்கரான அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் குறித்த அறிக்கையிடல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாரென பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அபு அக்லேவின் தயாரிப்பு உதவியாளரான ஊடகப் பணியாளர் அலி அல்-சமுதியும் சுடப்பட்ட நிலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அரபு உலகின் மிக முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான அபு அக்லே, இஸ்ரேலிய இராணுவத்தால் திட்டமிட்டே கொல்லப்பட்டாரென அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த கொலையை கண்டித்துள்ள அல் ஜசீரா, இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்புக் கூறலை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

- Advertisement -