அலரி மாளிகைக்கு முன்பாக இறுதி ஊர்வலம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை  பிற்பகல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைப் போன்று வருகைதந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரம்புக்கனை போராட்டத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் இறுதிக்கிரியையுடன் இணைந்து இந்த அடையாள இறுதி ஊர்வலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அலரி மாளிகையின் பிரதான நுழைவாயில் மற்றும் சுவர்களில் இரத்தக் கறையுடன் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

மேலும், அலரிமாளிகை முன்பாக பல இடங்களில் மலர் வளையம் வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.