அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் : கைதான மூவருக்கு விளக்கமறியல்

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மாலைத்தீவுகள் பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM