அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக வழங்கிய முறைப்பாட்டையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி