அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் அரண்மனை

ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லமான அரண்மனை, அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Shanakiya Rasaputhiran

பங்களாதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து, பங்களாதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad