அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல்

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட காலம் அவகாசம் கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், குறித்த காலம் அவகாசம் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்