அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை

மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஊடகங்கள் மூலமாக  சில தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இந்நிலையில், அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போதியளவில் கையிருப்பில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.