அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கியவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த இருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடாத்திய ஒருவர், புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று, அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் – காரைநகர் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு செய்தனர்.

அத்துடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் இது குறித்து கலந்துரையாடினர்.

இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அத்துடன் அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பணிப் பகிஸ்கரிப்பு இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடாத்திய ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்