அரச தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகள் இன்று புதன்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணை வெள்ளிக்கிழமை முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா 2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்காக ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.