Sri Lanka Tamil News Site

அரச காணியை தனிநபரிடமிருந்து மீட்டு தருமாறு கோரிக்கை

- Advertisement -

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 14ஏக்கர் காணியை சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும், குறித்த காணியை நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் நுவரெலியா மீப்பிலிமான விவசாயிகள் இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிகை விடுத்துள்ளனர்.

குறித்த காணியினை விட்டு வெளியேறுமாறு நுவரெலியா பிரதேச செயலாளர் ஊடாக எழுத்து மூலம் அறிவித்துள்ள போதிலும் அந்த நபர் காணியினை வழங்காது பலவந்தமாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார்.

- Advertisement -

நுவரெலியா மீப்பிலிமான பகுதி மக்கள் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாக முன்னெடுத்து வருகிறார்கள் நம்பியிருக்கிறார்கள்.

எனவே தனிநபரிடமிருந்து அக்காணி யை பெற்று விவசாய தினைக்களத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . நுவரெலியா மீப்பிலிமான பகுதி மக்கள் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாக முன்னெடுத்து வருகிறார்கள்.

அரசாங்க அதிபரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய திணைக்கள உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -