Last updated on December 30th, 2024 at 10:18 am

அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம் | Minnal 24 News %

அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம்

அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால வேதனத்தில் கழிக்கப்படும் வகையில் இந்த முற்பணத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முற்பணம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் செலுத்தப்பட உள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களினால் மேற்கொள்ளப்படும் எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்