அரசியல் கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று புதன் கிழமை இடம்பெறுகின்றது.

இதில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்,

“பல அரசியல் கைதிகள் இதுவரையில் விடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளதாகவும் உரிய சட்டத்துறையினருடன் கலந்துரையாடி அதிக காலம் தாழ்த்தாது விரைவில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க