அரசியல் கட்சி மாநாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் J.U.I.F என்னும் அரசியல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து ஓடினர்.

இக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் J.U.I.F கட்சியின் உள்ளூர் தலைவர் மவுலானா ஜியாஉல்லா உள்ளிட்ட 44 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால்இ உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில் மனித வெடிகுண்டு தாக்குதல் என்பதும், 12 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனினும், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர்இ பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்