அரசாங்க தொழில் வழங்குதல் சுதந்திரத்தின் பின்னர் இலங்கை செய்த பாரிய தவறு

நாட்டைக் கட்டியெழுப்ப மாற்று வழி இருப்பதாக கூறும் கட்சியினர் ஐ.எம்.எப் இற்கு சென்று கலந்துரையாட அரசாங்க செலவில் விமானப் பயணச்சீட்டு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை தெரிவித்தார்

நாட்டைக் கட்டியெழுப்பும் தற்போதைய வழிக்கு மாற்று வழி இருப்பதாக ஏதேனும் தரப்பினர் கூறினால், ஐ.எம்.எப் இற்கு சென்று அந்த மாற்று வழி தொடர்பில் கலந்துரையாட அவர்களுக்கு அரசாங்க செலவில் விமானப் பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் அந்தக் கட்சிகள் முன்வைக்கும் மாற்றுக் கருத்துக்கள் நல்லவையாக இருந்தால் அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இனியும் பழைய அரசியலில் ஈடுபட முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்

கடன் மறுசீரமைப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநர்கள் அல்லது கடன் பெற்றவர்களுக்கு இல்லை என்றும், அது தொடர்பில் தீர்மானம் எடுப்பது IMF அமைப்பு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாட்டில் கடன் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தேவையான மறுசீரமைப்புத் திட்டத்தை ஐஆகு அமைப்பே தீர்மானிக்கிறது எ்னறும் தெரிவித்தார்

தற்போதைய புவிசார் அரசியல் போக்குகள் உட்பட பல சவால்கள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், IMF திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 15 மாதங்களுக்குள், உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கு உடன்பாட்டை எட்ட முடிந்தது என்றும், இவ்வாறான குறுகிய காலத்தில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் முதன்மை நாடாக இலங்கை முன்னணியில் இருப்பது ஒரு சிறப்பான வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2028 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, 2.1% அல்லது அதற்குக் குறைவான வட்டி விகிதங்களைப் பேணுதல், கடனை முழுமையாகச் செலுத்த 2043 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமைஇ இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பன எட்டப்பட்ட உடன்பாடுகளில் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

தற்போதைய புவிசார் அரசியல் போக்குகள் உட்பட பல சவால்கள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், IMF திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 15 மாதங்களுக்குள், உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கு உடன்பாட்டை எட்ட முடிந்தது என்றும், இவ்வாறான குறுகிய காலத்தில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் முதன்மை நாடாக இலங்கை முன்னணியில் இருப்பது ஒரு சிறப்பான வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2028 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, 2.1% அல்லது அதற்குக் குறைவான வட்டி விகிதங்களைப் பேணுதல், கடனை முழுமையாகச் செலுத்த 2043 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பன எட்டப்பட்ட உடன்பாடுகளில் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடன் சேவைச் செலவை ஒத்திவைக்கக் கூடிய வகையில் பிரதான கடன் தொகையினை திருப்பிச் செலுத்துவது படிப்படியாக அதிகரிக்க நேரிடும் என்றும், இதன் விளைவாக 05 பில்லியன் டொலர் இலங்கைக்கு கடன் சேவைத் தொகை மீதமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இணக்கப்பாடுகளினால் பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், கையிருப்புக்களை மீளக் கட்டியெழுப்புதல், அரச நிதி உத்தரவாதங்களை உருவாக்குதல் மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடனைச் செலுத்தும் வகையில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

இந்நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 37 பில்லியன் டொலர்களாக இருந்தாகவும் தான் ஆட்சிக்கு வந்தபோது அது 71 பில்லியன் ஆக இருந்ததாகவும், அது தற்போது 100 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் பொய்யான புள்ளிவிபரங்களை வழங்கி கீழ்த்தரமான அவமதிப்புகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

கடன் வழங்குநர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கைக்கு மீண்டும் இருதரப்பு வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் வெளிநாட்டுக் கடன் உதவியில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அன்றாட உணவுத் தேவைகள், சம்பள அதிகரிப்பு, அரசாங்க தொழில் வழங்குதல், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள்,மின்சாரம் என்பவற்றை வழங்குதல் மற்றும் அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்ட வெளிநாட்டுக் கடன் உதவிகளைப் பயன்படுத்தியமை என்பன சுதந்திரத்தின் பின்னர் இலங்கை செய்த பாரிய தவறுகள் என ஜனாதிபதி தெரிவித்தார

சில அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் தாம் வழங்கும் சலுகைகள் குறித்து ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கினாலும் அதற்காக பணம் திரட்டும் முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்