
அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆண்டு விழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் உள்ள ஹைட் பார்க் மைதானத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுவிழா “தொலைதூரம் காண்போம், அணி திரள்வோம், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகிறது.
பாரபட்சமின்றி, மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து கொழும்பு மேயர் பதவிக்குப் போட்டியிடும் ருவைஃப் ஹனிபாவின் கொள்கை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்