
அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் மக்களிடம் கையளிப்பு
குருமன்வெளி மண்டூர் மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் டி சில்வா வினால் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக வழங்கப்பட்டது.
20 வருடங்களுக்கு மேலாக, சேதமடைந்து காணப்பட்ட நிலையில் , இப் புதிய படகுப் பாதைகள் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மற்றும்
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், பொறியிலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மண்டூர் குருமன்வெளி போக்குவரத்துக்காக 02 படகுப்பாதைகள் சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் , குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் போக்குவரத்துக்காக ஒரு படகுப் பாதையும் சேவையில் ஆரம்பத்தில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக வழங்கப்பட்ட படகுப்பாதை மண்டூர் குருமன்வெளி போக்குவரத்துக்காக ஒன்றும், குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் போக்குவரத்துக்காக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature