அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் நடாத்திய 5 மாபெரும் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக இவ்வாறு அதிகளவான மக்கள் இப்பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாகவும் அவரின் உரையினை ஆவலுடன் கேட்பதற்கும் அதிகளவான மக்கள் இக்கூட்டங்களில் ஒன்று கூடி இருந்தனர்.

குறித்த கூட்டங்கள் அம்பாறை நகர் பகுதி சாய்ந்தமருது, அக்கரைப்பற்று ,நிந்தவூர், சம்மாந்துறை, ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றதுடன் அதிகளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

default

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்