அம்பாறை-கிட்டங்கி வீதியில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை கிட்டங்கி வீதி அடை மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.

கல்முனை மாநகரையும், நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று செவ்வாய்க்கிழமை போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது தவிர கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி இரண்டு நாட்களாக அப்பகுதி ஊடாக பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள் மாணவர்களை பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு உதவி செய்வதுடன், தன்னார்வமாக தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன், அப்பகுதியில் பயணம் செய்ய சிரமப்படும் பொதுமக்களை இனங்கண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை காண முடிகின்றது.

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal24 FM