அம்பாறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை – மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Minnal24 வானொலி