அமைச்சர் பவித்ரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனான நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்