
அமெரிக்க ஹொலிவுட் திரைப்படங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்கும் சீனா
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹொலிவுட் திரைப்படங்கள் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தீர்வை வரியை விதித்தது .
இந்த நிலையில் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், சீனாவிற்கான வரியை 125 சதவீதமாக அமெரிக்க அரசாங்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை கொண்ட அமெரிக்காவில் தயாராகும் ஹொலிவுட் திரைப்படங்கள் வெளியாவதற்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்