
அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் அதிகரித்துள்ள வர்த்தக மோதல்களைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஜே.டி. வான்ஸ் உட்பட அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் 4 நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்