அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கட்டார் – ஏர்வேஸின் கியு.ஆர் – 662 விமானத்தின் ஊடாக இன்று வியாழக்கிழமை அதிகாலை அவரும் அவரது தூதுக்குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்