அமெரிக்காவில் தொடரும் துயரம் : 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரையாகியுள்ளன.
இதன் காரணமாக, குறித்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லொஸ் ஏஞ்சலிஸின் வடமேற்கில் தீ பரவியதன் காரணமாக அங்கிருந்து சுமார் 52,314 பேர் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் 10 ஏக்கரில் பரவிய தீயானது தற்போது 2,900ற்கும் அதிகமான ஏக்கருக்குப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பசடேனா (Pasadena) பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லொஸ் ஏஞ்சலிஸின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்