அமெரிக்காவில் தொடரும் தீ : மற்றுமொரு தீ விபத்து!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர கட்டிடம் ஒன்றில், பாரிய தீப்பரவல், நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவவிக்கின்றன.

கிழக்கு பிராங்க்ஸில் உள்ள, வாலஸ் அவென்யூவில் ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று அதிகாலை 1:40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தீயை அணைக்க கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, பலமணி நேர போராட்டத்தின் பின் தீயை அணைத்தனர்

இச்சம்பவத்தில், ஏழு பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.